ரப்பர் சாலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆய்வு

பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரப்பர் சாலையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரத்தையும், ராமநாதபுரத்தையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 2.3 கிலோ மீட்டர் தூரத்தில் ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இந்தச் சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இங்கு புதிய சாலை அமைக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சாலையை சீரமைக்க உத்தரவிட்டது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சாமிநாதன், சசிதரண், உஷா பானு ஆகியோர் சாலையை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் அவர்களிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து தனுஷ்கோடியில் நீதிபதிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன