Advertisement

ரபேல் விமானங்கள் வாங்குவதில் தாமதம் ஏன் என்று காங்கிரஸ் எழுப்பும் புகார்களுக்கு பாஜக பதிலடி

ரஃபேல் போர் விமானங்கள் மத்திய அரசுக்கு வாங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தேசப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்வதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் டென்டர் விடுக்கப்பட்டது. அப்போது கூறப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு விமானங்களை வாங்க பாஜக அரசு முடிவு செய்தது குறித்தும் காங்கிரஸ் கேள்விஎழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ், விவிஐபிகளுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கிய விவகாரத்தில் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களின் மீது முறைகேடு புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அது போன்ற சிக்கல் மீண்டும் ஏற்படுமோ என காங்கிரஸ் அஞ்சுவதாக அவர் கூறினார்.அகஸ்டா வெஸ்ட்லாண்ட் விவகாரத்தை திசைதிருப்பவே ரஃபேல் விமானங்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புவதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன