Advertisement

ரத்தக்காட்டேரிகள் என்ற சந்தேகத்தில் 9 பேர் அடித்துக் கொலை

ஆப்பிரிக்க நாடான மலாவியில் இரத்தக் காட்டேரிகள் என்ற சந்தேகத்தில் 9 பேரை கொடூரமாக கொலை செய்த 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலாவியின் ப்லாண்டைர் ((blantyre)) என்ற நகரில் வசிக்கும் மக்கள் மாந்திரீக நாட்டம் அதிகம் உடையவர்கள். இங்கு கடந்த சில மாதங்களாக ரத்தக் காட்டேரிகள் சுற்றித் திரிவதாக வதந்தி பரவியது. இந்த நிலையில், வலிப்பு நோய் ஏற்பட்ட ஒருவரை ரத்தக் காட்டேரி எனக் கூறி அந்த மக்கள், தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதுபோல ரத்தக் காட்டேரிகள் என்ற சந்தேகத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன