Advertisement

ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தத்தின் மீது குறை சொல்வது வெட்கக் கேடானது -நிர்மலா சீத்தராமன்

ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தத்தின் மீது குறை சொல்வது வெட்கக் கேடானது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்துக்கு பலனளிப்பதற்காக ஒப்பந்தத்தையே பிரதமர் மோடி மாற்றி அமைத்ததாக காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அது குறித்து முடிவெடுக்காமலேயே அமர்ந்திருந்ததாகக் கூறினார்.

இந்திய விமானப் படைக்கு அவசரத் தேவையைக் கருதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றி, பிரான்ஸ் – இந்தியா இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்பே கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். தற்போது ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து குற்றம்சாட்டுவது வெட்கக்கேடானது என்றும், ராணுவ வீரர்களின் சேவையைக் களங்கப்படுத்தும் செயல் என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன