Advertisement
Advertisement

மோடியின் கழுத்தை வெட்ட பீகாரில் நிறைய பேர் தயார்: ராப்ரி தேவி

பிரதமர் மோடியின் கழுத்தை வெட்டவும், அவரது கைகளை துண்டிக்கவும் பீகாரில் நிறைய பேர் தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ராப்ரிதேவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக உயர்த்தப்படும் கைகள் வெட்டப்படும் என பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, பிரதமர் மோடியின் கழுத்தை வெட்டவும், அவரது கைகளை துண்டிக்கவும் பீகாரில் நிறைய பேர் தயாராக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி எதை செய்தாலும், நாட்டில் உள்ளவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா என கேள்வி எழுப்பிய அவர், மோடி குறித்து பேசினால் சிறைக்கு அனுப்பினால் அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன