மோசடி நிதி நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் உதவியாளர் கைது

கன்னியாகுமரி அருகே பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்தம்பாலை பகுதியில் ‘நிர்மல் கிருஷ்ணா’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, தமிழக கேரள மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதோடு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான குழித்துறையைச் சேர்ந்த அனில்குமார் என்பவரையும் உதவியாளர் மூவட்டுக் கோணத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவரையும் கைது செய்துள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளர் நிர்மலன் உட்பட மேலும் பலரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!