Advertisement

மைசூரு ராஜ வம்சத்தில் 400 ஆண்டுகால சாபத்தை முறியடித்து ஆண் வாரிசு பிறந்துள்ளது

மைசூரு ராஜ வம்சத்தில் 400 ஆண்டுகால சாபத்தை முறியடித்து அரச குடும்பத்துக்கு வாரிசு பிறந்துள்ளது. மைசூரில் 1612-ஆம் ஆண்டு போரில் ஸ்ரீரங்கப்பட்டினத்தை உடையார் சாம்ராஜ்யம் வென்றது.

மேலும் ஸ்ரீரங்கப்பட்டினம் ராணி அலமேலம்மாவை உடையார் சாம்ராஜ்ய காவலர்கள் துரத்தியுள்ளனர்.

இதனால் காவிரியில் குதித்து உயிர் நீக்க முடிவு செய்த அலமேலம்மா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக உடையார் மன்னருக்கு குழந்தைப் பேறே இல்லாமல் போகட்டும் என சாபம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரு அரச குடும்பத்தினருக்கு குழந்தைகள் பிறப்பதே இல்லை.

உறவினர்களின் குழந்தைகளைத் தத்தெடுத்தே, அரச வாரிசாக்கி முடிசூட்டினர். இந்த வகையில் ராணி பிரமோதா தேவி, ராஜா ஸ்ரீ கந்த தத்த நரசிம்ம ராஜா தத்தெடுத்த இளவரசர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையாருக்கும்  திரிஷிகா குமாரிக்கும்  நேற்று ஆண் வாரிசு பிறந்தது.

அலமேலம்மா உயிர்நீத்த தலக்காட்டில் அவருக்கு சிலை வைத்து இளவரசர் வணங்கி வந்த நிலையில் ஆண்வாரிசு பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன