மெலனியாவை முதுகில் கை வைத்து தள்ளும் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தமது மனைவி மெலனியாவை, நிகழ்ச்சி ஒன்றில் முதுகில் கை வைத்து தள்ளும் காட்சிக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

மேரிலாண்டில் ((maryland)) உள்ள விமானப் படை தளத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மெலனியா, டொனால்ட் டிரம்பை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது மேடையில் இருந்த டிரம்ப், தமது மனைவி மெலனியாவுடன் கை குலுக்கி நன்றி தெரிவித்தார். பின்னர் மெலனியாவின் முதுகில் கை வைத்து அவரை தள்ளினார்.

பொது மேடையில் டிரம்ப் இவ்வாறு நடந்து கொள்வது புதிதல்ல என்ற போதும், தற்போது நடந்த இச்சம்பவம் டிவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!