Advertisement

மெர்சல்-கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

மெர்சல் திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை பொது நல வழக்காக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் மெர்சல் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு வழக்கு பொது நல நோக்கம் கொண்டதாக இருப்பதால், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். இரு நீதிபதிகள் முன்னிலையில், பொது நல மனுவாகத் தாக்கல் செய்யுமாறும் அவர் மனுதாரரிடம் அறிவுறுத்தியதோடு வழக்கை முடித்து வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன