மெரினா கடற்கரையில் இருந்து சிவாஜி சிலையை அகற்ற தடையில்லை

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றி, மணிமண்டபத்தில் நிறுவ தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக, சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடற்கரை சாலையில் உள்ள சிலையை அகற்றி, சாலை ஓரத்தில், பிற தலைவர்களின் சிலை உள்ள பகுதியிலேயே நிறுவ வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாஜி மணிமண்டபத்தில் அவரது சிலையை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசை நிர்பந்திக்க முடியாது என்றும் வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி துரைசாமி, கடற்கரை சாலையில் அகற்றப்படும் சிவாஜி சிலையை, மணிமண்டபத்தில் நிறுவத் தடையில்லை என்றும், ஆனால் வரும் 21ஆம் தேதி சிவாஜி கணேசனின் நினைவுநாள் என்பதால், அதற்கு முன்போ, அல்லது அதற்கு பின்போ சிலையை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன