Advertisement

மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில்களுக்கான வித்தியாசங்கள்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், மோனோ ரயில் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை கீழே பார்க்கலாம்…

மெட்ரோ ரயில் திட்டம், மோனோ ரயில் திட்டம் ஆகியவை, தனித்துவமான மேம்பால அமைப்பு வழித்தடங்களில் இயக்கப்படும் போக்குவரத்து அமைப்புகளாக திகழ்ந்தாலும், அவற்றிற்குள் பல வித்தியாசங்கள் உண்டு…

* இதில், மெட்ரோ ரயில் திட்டம், உலகளவில் 178 பெருநகரங்களில் பயன்பாட்டில் உள்ளது… மோனோ ரயில் திட்டம், ஆசிய நாடுகளில், 20 நகரங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது…

* மெட்ரோ ரயில் வழக்கமான ரயில்களை போன்று இரட்டை இரும்பு தண்டவாளத்தில் பயணிக்கும்… ஆனால், மோனோ ரயில் ஒற்றை தண்டவாள அமைப்பில் தான் பயணிக்கும்…

* மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க 9 பெட்டிகள் வரை இருக்கும்… மோனோ ரயிலில், 4 பெட்டிகள் வரை மட்டுமே இருக்கும்….

* மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற, ஏராளமான இடவசதிகள் தேவைப்படும்… ஆனால், மோனோ ரயில் திட்டத்திற்கு இடவசதி குறைவாகவே தேவைப்படுவதோடு, குறுகலான பகுதிகளிலும், மோனோ ரயிலுக்கான மேம்பால தூண்களை அமைத்து திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும்…

* மெட்ரோ ரயில் வழக்கமான ரயில்களை போன்று வேகமாக பயணிக்கும்… ஆனால், மோனோ ரயில் ஒற்றை தண்டவாளத்தில் இயக்கப்படுவதால், புறச்சூழலில் வீசும் காற்றின் தன்மைக்கு ஏற்றவாறும், பாதுகாப்பிற்காகவும், மிதமான வேகத்தில் மட்டுமே பயணிக்கும்…

* மெட்ரோ ரயில் திட்டம் மூலம் ஒரு மணி நேரத்தில், அதிகபட்சமாக, 40 ஆயிரம் பயணிகளை கையாள முடியும்… ஆனால், மோனோ ரயில் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக, 10 ஆயிரம் பயணிகளை மட்டுமே கையாள முடியும்….

* முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணங்கள் அதிகம்… ஆனால், மோனோ ரயிலில் பயணிக்க, பயண கட்டணம் குறைவாகும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன