மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடத்தால் குடியிருப்புப் பகுதியில் 28 வீடுகளில் விரிசல்

சென்னையில், மெட்ரோ ரயில் சுரங்க வழிப்பாதைக்கு மேற்பகுதியில் அமைந்திருக்கும் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுவதோடு, 28 வீடுகளில் விரிசல் அதிகமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள திரு.வி.க குடியிருப்புப் பகுதியில் 50 வீடுகள் உள்ளன. இதன் அருகே, அண்ணா நகர் கிழக்கு – ஷெனாய் நகரை இணைக்கும் மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடம் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே சுரங்க ரயில் வழித்தடம் அமைக்கும் பணியின்போது வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டது. தற்போது, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் 28 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

விரிசல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், சுரங்க வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்போது வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு, விரிசல் ஏற்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த குழுவின் ஆய்வறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன