Advertisement

மெக்ஸிகோவில், நில நடுக்கத்தால் வற்றி கலையிழந்து காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி

மெக்ஸிகோவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வந்த அழகிய நீர்வீழ்ச்சி நிலநடுக்கத்துக்குப் பின் வற்றிப் போனது இயற்கை ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓவியமாக வரையப்பட்ட அழகிய இயற்கைக் காட்சி போல சியாபஸ் (Chiapas)பகுதியில் காட்சியளித்த ஆக்வா (Agua) எனும் அழகிய நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பொழுது போக்குத் தளமாக இருந்தது.

ஆனால் கடந்த செப்டம்பரில் மெக்ஸிகோவில் ஏற்பட்ட இரு கடுமையான நிலநடுக்கத்துக்குப் பின், அந்த நிர்வீழ்ச்சி வற்றிப் போனது. குறைந்தளவே நீர் வருவதால், அழகிய தோற்றப் பொழிவை இழந்து நிற்கிறது. இதனால், அப்பகுதியின் சுற்றுலா வருவாயும் இழப்பை சந்தித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன