Advertisement
Advertisement

மெக்சிகோவில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலம்

மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவில் தமிழ்நாட்டின் சுற்றுலாவை விளம்பரப்படுத்தும் பலூன் பறக்கவிடப்பட்டது.

லியான் நகரில் இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 23 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சுற்றுலா தளங்களை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையை சேர்ந்த பெனிடிக்ட் சேவியோ என்பவர் ஒரு பலூனை தயாரித்து பறக்கவிட்டார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியுடன் இந்த பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும் ராட்சத பலூன்கள், வானில் வட்டமிட்டபடி பறக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன