மும்பை – பிரம்மாண்டப் படப்பிடிப்புத் தளமான ஆர்.கே. ஸ்டூடியோவில் தீ

மும்பையில் ஆர்.கே. ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தி படப்பிடிப்புத் தளமாக இருக்கும் இந்த ஸ்டூடியோ 1945-ல் கட்டப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் சனிக்கிழமை பிற்பகலில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட மின்சாதனப் பொருட்களில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த 6 தீயணைப்பு வாகனங்களும், 4 தண்ணீர் லாரிகள் உதவியுடன் பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்தில் பற்றியி தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் யாருக்கு உயிரிழப்பில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன