Advertisement

முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டிய காவலரால் பரபரப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்திடம் துப்பாக்கியை நீட்டிய காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் சின்ட்வாரா விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி செல்லும் விமானத்தில் கமல்நாத் புறப்பட இருந்த போது பாதுகாப்புக்காக நின்றிருந்த ரத்னேஷ் பவார் என்பவர் திடீரென தமது துப்பாக்கியை எடுத்து கமல்நாத்தை நோக்கி நீட்டியதால் பதற்றம் உருவானது. அங்கிருந்த இதர காவலர்கள் உடனடியாகப் பாய்ந்து ரத்னேஷை மடக்கிப் பிடித்தனர். ஆனால், துப்பாக்கியை நீட்டவில்லை என்றும், தோள்பட்டைக்கு மாற்றியதாகவும் விசாரணையின்போது காவலர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன