Advertisement

முன்னாள் சபாநாயகர் PH பாண்டியனின் மனைவி உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் இன்று காலமானார். சிந்தியா பாண்டியன் 2005 முதல் 2008 வரை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

தமிழக உயர்கல்வித்துறை ஆணையராகவும் செயல்பட்ட அவர், 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன