Advertisement

முதலாம் வகுப்பு மாணவனுக்கு பள்ளிக் கழிப்பறையில் வைத்து கத்திக் குத்து

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முதலாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பள்ளிக் கழிப்பறையிலிருந்து மீட்கப்பட்டான். காலைநேர கூட்டுப் பிரார்த்தனைக்குச் சென்று கொண்டிருந்த தம்மை ஆண் போல் முடித்திருத்தம் செய்திருந்த சீனியர் மாணவி ஒருவர் 2-ம் தளத்தில் இருந்து தூக்கி வந்ததாக அச்சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

கழிப்றையில் வைத்து வயிறு முகம், இடது கண் என பல இடங்களில் கத்தியால் தாக்கிவிட்டு அந்த மாணவி கதவை வெளிப்பக்கம் தாழிட்டுவிட்டுத் தப்பியதாக அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான். அண்மையில் ஹரியானாவில் ரியான் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன், சக மாணவரால் கழிப்பறையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன