Advertisement

மீன் ஏற்றிச் சென்ற மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மீன் ஏற்றிச் சென்ற மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் சிதறிய மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் குளச்சல் துறைமுகத்தில் இருந்து மினி வேனில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை மதுரைக்கு ஏற்றிச் சென்றார்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் அருகே பின்பக்க டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய வேன் சாலைத் தடுப்பில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த ஓட்டுநர் மாயக்கண்ணன், க்ளீனர் அருண் ஆகியோரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன