மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கிய இளம்பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் இயற்கை பாதுகாப்பு குழு சார்பில், அங்குள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வளர்மதி, ஜெயந்தி என்ற இருவர் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இதையடுத்து, இவர்கள் நக்சல்கள் எனக்கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜெயந்தி, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வளர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இளம்பெண் ஜெயந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி, சேலம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!