Advertisement
Advertisement

மின் மீட்டர் ஒப்பந்தம் குறித்து விளக்கங்களை ஏற்காமல் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டுவதா?-தங்கமணி

மின் மீட்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த பின்னரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும் குற்றம்சாட்டி வருவது அவரது அரசியல் உள்நோக்கத்தையே காட்டுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

டெண்டர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஊழல் நடைபெற்று விட்டதாக கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்றும் தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த அரசு மீது குற்றம் சாட்ட வேறு விவகாரங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சித் தலைவர் இதைக் கையிலெடுத்திருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தால் அதனைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன