மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் பாஜக நிர்வாகிகள் சார்பாக பிரதமர் மோடியின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மணலி புதுநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், காலை 11 மணி அளவில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துரை வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்ட பின்னர் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

பிரதமரின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில், அங்குள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன