Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த மாநில அரசுகளுக்கு தாவர்சந்த் கெலாட் வேண்டுகோள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துமாறு மாநில அரசுகளை மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் கொண்டுவந்த பிறகு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் 6 விழுக்காடாக உயர்த்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் மற்ற மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன