Advertisement

மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவது குறித்த கேள்விக்கு வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
மதுரையில் பிரம்ம குமாரிகள் சார்பில் மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஆயுதப்படை மைதானத்தில் இருந்து திருப்பாலை வரை 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தமிழக ஆளுநர் கோவையில் ஆய்வு நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாளிக்காமல் அமைச்சர் உதயகுமார் அங்கிருந்து சென்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன