Advertisement

மாயமான மீனவர்களை தேடும் பணி டிசம்பர் 27ந் தேதியோடு முடிந்துவிட்டது – நிர்மலா சீதாராமன்

சென்னை கலைவாணர் அரங்கில், பாதுகாப்புத்துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களின் 2 நாள் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேலத்தில் போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் முதலமைச்சரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் எனினும் தமிழகத்தில் ஏற்கனவே பல பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் முக்கிய பாகங்கள் தமிழக தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டுவிட்டதாக கூறினார். மேலும் மீனவர்களை தேடுதல் பணியை மீண்டும் தொடங்கக் கோரி தமிழக முதலமைச்சரிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன