Advertisement

மாணவி விஷம் கொடுத்து கொலை செய்ததாக 12ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 11 ஆம் வகுப்பு மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புன்னகை மன்னன் படத்தில் வருவது போல காதலன் தப்பித்துக்கொள்ள காதலி உயிரிழந்த பரிதாபம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் கீழ் நாடுகாணியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது தெரியாமல் பெற்றோர் தவித்து வந்த நிலையில் அந்த மாணவி , தமிழக கேரள எல்லையையொட்டிய பாப்சன் தேயிலை தோட்டத்தில் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடப்பதாக பந்தலூர் அரசு மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அங்கு சென்று பார்த்த போது சடலமாக கிடந்த மாணவியின் அருகே வேர் செடிகளுக்கு அடிக்க கூடிய கொடிய விஷ மருத்து பொட்டலம் ஒன்று கிடந்தது. மேலும் விச மருந்து கலந்த தண்ணீர் பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே மாணவியை கடத்திச்சென்ற கும்பல் ஒன்று பலாத்காரம் செய்து சடலத்தை வீசிவிட்டு சென்று விட்டதாக முகனூல் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

உடனடியாக அந்த மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், மாணவியின் மரணம் குறித்து முதலில் தகவல் தெரிவித்த பந்தலூர் அரசு மருத்துவமனையில் விசாரித்தனர்.

அங்கிருந்து தகவல் கொடுத்தது அந்த மாணவியின் காதலன் என்பதும், மாணவி படிக்கும் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவரும் வேறு வேறு ஜாதி என்பதாலும், பள்ளி பருவம் என்பதாலும் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை பின் தொடர்ந்து சென்ற அந்த மாணவன் , தங்கள் காதல் விவகாரத்தை மாணவியின் பெற்றோரிடம் எடுத்து கூறி திருமணம் செய்து வைக்கும்படி கூறி உள்ளான். அதற்கு மாணவியின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மாணவியை அழைத்துச்சென்ற அந்த மாணவன், மரணத்திலாவது ஒன்று சேரலாம் என்று மாணவியை மூளைச்சலவை செய்து விஷமருந்து கலந்த தண்ணீரை மாணவிக்கு குடிக்க கொடுத்துள்ளான். மாணவி வலியால் துடித்துப்பதை கண்ட மாணவன் பயந்து போய் விசமருந்தை சிறிதளவு மட்டும் குடித்துவிட்டு பந்தலூர் மருத்துமனையில் போய் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அந்த மாணவன் கஞ்சா பழக்கம் உள்ளவன் என்றும் அவனால் தங்கள் மகளுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதாலேயே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பெற்றொர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்ததாக காதலன் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர். அவன் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுவிடாதபடி பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

புன்னகை மன்னன் படத்தில் வருவது போன்று நடந்துள்ள இந்த தற்கொலை சம்பவம் கூடலூரில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன