மாடு மேய்க்கச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, ராமபையலூர் கிராமத்தை ஒட்டிய சின்னாம்பதி காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதில், அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி, வெள்ளத்தின் இடையே சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ராஜம்மாளையும், அவரது மாட்டையும் மீட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!