மளிக்கைக் கடை நடத்திய பெண்ணிடம் தங்க நகை மோசடி

சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி ஐந்தரை சவரன் நகையை வாங்கிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெசப்பாக்கம் ஏரிக்கரையில் மளிகைக் கடை நடத்திவரும் மஞ்சுளாவிடம் 10 நாட்கள் தொடர்ந்து காய்கறி வாங்க வருவது போல், கட்டிட வேலை செய்துவருவதாகக் கூறி தாயும், மகனும் பழகியுள்ளனர்.

தாங்கள் வேலை செய்த இடத்தில் தங்க நகை கிடைத்ததாகவும், கூலி வேலை செய்யும் தங்களுக்கு எதற்கு தங்க நகை எனவும் கூறி, அதை மஞ்சுளாவையே வைத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்துள்ளனர்.

அடகுக் கடையில் அதை பரிசோதித்த மஞ்சுளா ஒன்றரை கிராம் எடை கொண்ட தங்க நகை என தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தார். சில நாட்களுக்குப் பின் 300 கிராம் எடைகொண்ட தங்கக் கட்டி கிடைத்ததாகக் கூறிய அவர்கள், அதை மஞ்சுளாவிடம் கொடுத்து பணம் கேட்டுள்ளனர்.

பணம் இல்லாததால் தமது ஐந்தரை சவரன் நகையை அவர்களிடம் கொடுத்ததோடு, வீட்டுக்குத் தேவையான 25 கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றையும் மஞ்சுளா கொடுத்துள்ளார். மீதி பணத்தை பின்பு வாங்கிக்கொள்வதாக கூறி அவர்கள் சென்றதும், நகையைப் பரிசோதித்த மஞ்சுளா அது தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை கட்டி என அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எம்ஜிஆர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன