Advertisement

மல்லையாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லண்டன் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மல்லையாவுக்கு இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய லண்டன் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பியோடிய மல்லையாவை இந்தியா கொண்டுவந்து விசாரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதை எதிர்த்து, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த விஜய் மல்லையா, தனது உயிருக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், மல்லையாவுக்கு இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இன்று, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையா ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன