மலையேறும்போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழப்பு

மலையேறும்போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழந்ததால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரரான ஹைடன் கென்னடி தற்கொலை செய்துகொண்டார்.

27 வயதான ஹைடன் கென்னடியின் பெண் தோழியான 23 வயதான பெர்கின்சும் பிரசித்தி பெற்ற மலையேறும் வீராங்கனை. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் மாண்டானா பகுதியில் பனி மலையில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ஹைடன் கென்னடி பாதி புதைந்த நிலையில் லாவகமாக வெளியேறி தப்பினார்.

ஆனால் அவரது தோழி பெர்கின்ஸ் தப்ப முடியாமல் பனிப்பாளத்துக்கு கீழ் புதையுண்டு உயிரிழந்தார். இதனை தாங்க முடியாமல் ஹைடன் கென்னடி தனது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன