மர்மக் காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மக் காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழந்தார். அந்தியூரை அடுத்த மூலையூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமாரின் மகள் சுதர்சினி.

அரசுப் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமிக்கு கடந்த 8-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.

தொடர்ந்து காய்ச்சல் இருந்தபோதும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு காய்ச்சல் அதிகமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமி சுதர்சினி உயிரிழந்தார். அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!