Advertisement

மருந்து தொழிற்சாலையின் ராட்சத புகைபோக்கிகள் தகர்ப்பு

சீனாவில் தொழிற்சாலை ஒன்றின் பிரம்மாண்ட புகைபோக்கி ((ஒன்று)), வெடி வைக்கப்பட்டு பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. ஷாங்காயில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று கடந்த ஆண்டு மூடப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், 150 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான 2 புகைபோக்கிகள் செயல்பாடின்றி கைவிடப்பட்டன.

இவற்றை அகற்ற முடிவு செய்த தொழிற்சாலை நிர்வாகம், முறையாக திட்டமிட்டு, வெடிகள் பொருத்தியது. பின்னர் நொடி நேரத்தில் அந்த 2 புகைபோக்கிகளும் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன. சுற்றுப்புறங்களில் எவ்விதப் பாதிப்பும் நேரிடாதவகையில் திட்டமிடப்பட்டு, தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன