Advertisement

மருந்தகத்துக்குள் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சுகாதாரத்துறையினர் சோதனையின்போது தப்பியோடிய இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திம்மநாயக்கன்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக சக்திவேல் என்பவர், ஸ்ரீ சக்தி மெடிக்கல்ஸ் என்ற பெயரிலும் 4 ஆண்டுகளாக சரவணன் என்பவர் சரஸ்வதி மெடிக்கல்ஸ் என்ற பெயரிலும் மருந்தகங்கள் நடத்தி வந்துள்ளனர். இருவருமே மருந்தகத்திற்குள் வைத்து அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், சக்திவேலுவும் சரவணனும் ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்தனர்.

இருவரையும் பிடித்து காவல்துறையினர் உதவியுடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் பின் ஒருவராக தப்பியோடினர். இதனையடுத்து அவர்களது மருந்தககங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன