மரபணு மாற்றப்பட்ட கடுகு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

மரபணு மாற்றப்பட்ட கடுகு விற்பனையை வர்த்தக ரீதியில் தொடங்குவது தொடர்பான கொள்கை முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு விற்பனை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், அதன் விற்பனையை தடை செய்யுமாறு தொடரப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ((J.S.Khehar)) ஜே எஸ் கேஹர், மற்றும் டி ஒய் சந்திரசூட் ((D.Y.Chandrachud)) அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ((Tushar)) அரசு இது தொடர்பாக பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து வருவதாகவும், வர்த்தக ரீதியிலான விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசின் இறுதி முடிவை வரும் திங்கள் கிழமைக்குள் தெரிவிக்குமாறு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன