மரண தண்டனை முறை மீண்டும் கொண்டுவரப்பட்டு துரோகிகள் கொல்லப்படுவர் – துருக்கி அதிபர்

துருக்கியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்ததைக் குறிக்கும், முதலாம் ஆண்டு நினைவு தினத்தின்போது, மரண தண்டனையை மீண்டும் கொண்டுவந்து துரோகிகளின் தலைகளை வெட்டப்போவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி, துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் மேற்கொண்ட, ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்தது. துரோகிகள் எனக் கருதி அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் அரசால் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில், ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததை குறிக்கும் ஓராண்டு நிறைவு நினைவுதினத்தில் இஸ்தான்புல்லில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மரண தண்டனை முறையை மீண்டும் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால், அதற்குத் தடையாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கதவுகளை அடைக்கப் போவதாகவும் துருக்கி அதிபர் அறிவித்தார். விசா முதல்கொண்டு சிரிய அகதிகளுக்கான உதவிகள் வரை எதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்குவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன