Advertisement

மயானபூமிக்குச் செல்ல முறையான பாதையின்றி தவிக்கும் கிராம மக்கள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே இறந்தவர் உடல்களை மயான பூமிக்கு எடுத்துச் செல்ல வழியின்றி விவசாய பயிர்கள் நடுவே தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.

கோவிலம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபேரியில் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்கு கொண்டுசெல்ல தனி நபர் ஒருவரின் நிலத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்துவருகிறது. பல ஆண்டுகளாக பயிரிடப்படாமல் இருந்த அந்த நிலத்தில், தற்போது அதன் உரிமையாளர் நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ளார். இதனால் நெல் வயலில் இறங்கி பிரேதங்களை தூக்கிச் செல்லும் நிலையில் உதயமார்த்தாண்டபேரி கிராமத்தினர் உள்ளனர். எனவே தங்களுக்கு மயானபூமிக்கு செல்ல பிரத்யேக பாதை அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன