அக்காவுக்கு அசைவம் சமைக்காத காரணத்தால் மனைவி கழுத்தை நெறித்து கொலை – கணவன் தற்கொலை

சென்னை எர்ணாவூரில் அக்காவுக்கு அசைவம் சமைத்து போடாத காரணத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மோகனுக்கு சரளா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வந்தனர். நேற்று மோகனின் அக்கா, காசிமேட்டில் இருந்து மோகனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவருக்கு அசைவம் சமைத்து போடுமாறு சரளாவிடம் மோகன் கூறியதாகவும், இதற்கு சரளா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது சரளாவின் கழுத்தை நெறித்து மோகன் தள்ளி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

காலையில் எழுந்து மனைவியை எழுப்பிய போது அவர் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்த மோகன், பாத் ரூமிற்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன