தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகளை எடுத்து செல்லும் இந்தியர்களுக்கு சிறை

மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகளை அறியாமையால் எடுத்துச் செல்லும் இந்திய தொழிலாளர்கள் கடுமையான சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

டிரமடால் (Tramadol) எனப்படும் வலிநிவாரணி உள்ளிட்ட 400 மருந்துகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், துபாயில் வேலைசெய்யும் தனது கணவருக்கு லட்சுமி என்ற பெண், அங்கு தடை செய்யப்பட்ட மருந்து என தெரியாமல் டிரமடால் மாத்திரைகளை வாங்கி அனுப்பியுள்ளார். ஆனால், தடை செய்யப்பட்ட மருந்தை கடத்தியதாக லட்சுமியின் கணவருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மூலம், அவர்களது அறியாமையை பயன்படுத்தி ஏஜெண்ட்டுகள் டிரமடால் மாத்திரைகளை அனுப்புவதும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கானாவை சேர்ந்த Srinu Pusula என்பவர் அப்படி கொண்டு சென்றபோது கடந்த ஆண்டில் துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன