Advertisement
Advertisement

டெங்கு பாதிப்பு குறித்து ஆராய வந்துள்ள மத்தியக் குழுவினர் மோடியிடம் சொல்வதால் என்ன பலன் – விஜயகாந்த்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய வந்துள்ள மத்தியக் குழுவினர் சாப்பிட்டுவிட்டு மோடியிடம் போய் சொல்வார்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்துப் பேசிய அவர் சிகிச்சை முறைகள் குறித்துக் மருத்துவரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர் இங்கு சாப்பிட்டுவிட்டு மோடியிடம் போய்ச் சொல்வதால் என்ன பலன் விளைந்துவிடப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்

ஜெயலலிதா கொடுத்த சிங்கம் குட்டி ஈன்றதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் வைத்திருப்பதாக விஜயகாந்த் தெரிவித்தார். ஆர்கே.நகரில் தே.மு.தி.க. போட்டியிடாது என்றும் இடைத் தேர்தலுக்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன