Advertisement

மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை டிசம்பர் 7ஆம் தேதிவரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைந்தால் தேவையற்ற சர்ச்சைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு இடைக்கால தடை விதித்து கடந்த அக்டோபர் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா தரப்பில் எவரும் ஆஜராகாததால் மதுரை மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய விதிக்கப்பட்ட தடை, டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன