Advertisement

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வசூல் வேட்டை – டாஸ்மாக் மேலாளர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று 8 லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சமாக வசூலித்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க டாஸ்மாக் மேலாளர் மதிச்செல்வம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்மூலம் வசூலான தொகையை மேலாளர் மதிச்செல்வம், அலுவலக ஊழியர்கள் முருகேசன், மணிவண்ணன் ஆகியோர் நேற்றிரவு மொத்தமாக வசூலித்துள்ளனர்.

தகவலறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவர்கள் வந்த காரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வழிமறித்தனர். சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன