மதுக்கடையை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆயத்தீர்வை உதவி ஆணையர்

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆயத்தீர்வை உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து கடையை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்குமாறு, கடையின் மேற்பார்வையாளரான நிர்மல்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆயத்தீர்வை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

மதுக்கடையை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்க, ஆயத்தீர்வை உதவி ஆணையரான சீனிவாசன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு, இறுதியாக 5 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நிர்மல்குமார் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுரையின் பேரில், இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நிர்மல்குமார் கொடுத்தபோது, சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன