Advertisement

குப்பை பொறுக்குவது போல நோட்டமிட்டு தொடர் கொள்ளை – 4 பேர் கைது

சென்னையில் குப்பை பொறுக்குவது போல நோட்டமிட்டு, வீடுகளில் கொள்ளையடித்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மண்ணடி – மூர் தெருவைச் சேர்ந்த உமுல் அபிபா, கடந்த 4-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை, ஜன்னலில் மறைவாக வைத்துச் சென்றுள்ளார். வெளியில் சென்று திரும்பும் நேரத்தில், வீட்டிலிருந்த 60 சவரன் நகைகள் மாயமாகின. வீட்டின் சாவி அவர் வைத்துச் சென்ற இடத்திலேயே இருந்தது.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய வடக்கு கடற்கரை போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒருவன் சந்தேகத்துக்குரிய வகையில் ஓடுவது பதிவாகியிருந்தது. ஓடுவது, குப்பை பொறுக்குபவன் என உறுதி செய்த அவர்கள், அவனை கைது செய்தனர்.

கண்ணகி நகரில் பதுங்கியிருந்த அவனது கூட்டாளிகள் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், லாரன்ஸ், பாலு, ஆகாஷ், அஜீத் என்ற அந்த நால்வரும், குப்பை பொறுக்குவதுபோல வீடுகளையும், சாவியை வைத்துச் செல்லும் இடத்தையும் தொடர்ந்து கண்காணித்து, யாரும் இல்லாதபோது கொள்ளையடித்து வந்ததாக கூறியுள்ளனர். இவர்களுக்கு லாரன்ஸ் தலைவன் என்பதும், அவன் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. பேசின் ரயில்வே பாலத்தில் குப்பைகளுக்கிடையே, பிளாஸ்டிக் பைகளில் ஒழித்து வைத்திருந்த 50 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன