Advertisement

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதானக் கால்வாயின் 1முதல் 4ஆவது பிரிவுகளின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு வரும் 20ஆம் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 முதல் 4ஆவது பிரிவுகளின் கீழ் உள்ள நிலங்களுக்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேண்டுகோளை ஏற்று வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் உள்ள 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன