Advertisement

மசூர்பருப்பை வாங்க மக்களை கட்டாயப்படுத்தவில்லை – செல்லூர் ராஜு

ரேஷன் கடைகளில் மசூர் பருப்பை வாங்க கட்டாயப்படுத்தவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் உளுந்து விற்கப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறையில் இருந்து வாங்கித் தரப்படும் பொருட்களை விற்பது மட்டுமே கூட்டுறவுத்துறையின் பணி என்று அவர் பதிலளித்தார். மசூர் பருப்பு தரமற்றது என்ற கருத்து நிலவுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அந்தப் பருப்பை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை என்று அவர் பதிலளித்தார்.

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் சாம்பார் வெங்காயம் என்ற பெயரில் பெரிய வெங்காயம் விற்பதாக எழுந்த புகார் தவறானது என்றும் அது கர்நாடக மாநிலத்தில் சாம்பாருக்கு பயன்படுத்தப்படும் சாலட் வகை வெங்காயம் என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன