Advertisement

“மக்களின் அதிகாரத்தை ஆதார் என்ற ஆயுதத்தால் பறிக்கிறது மோடி அரசு”-டிவிட்டரில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ஆதார் என்ற ஆயுதம் மூலம் மக்களின் அதிகாரம் பறிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணையை நேற்று தொடங்கியது.

இந்நிலையில் டிவிட்டரில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அறிமுகம் செய்த ஆதார் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது என்றும் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் ஆயுதமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதாருக்காக சேகரிக்கப்படும் தனிநபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஒவ்வொரு நபரும் அரசால் கண்காணிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு நீடிக்கிறது.

One Response to “மக்களின் அதிகாரத்தை ஆதார் என்ற ஆயுதத்தால் பறிக்கிறது மோடி அரசு”-டிவிட்டரில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

  1. N.Swaminathan சொல்கிறார்:

    சாதாரண மக்கள் வாழ்வாதரங்களுக்கான பல திட்டங்களில் வசதியானவரகள் போலி ஆவணங்களைத் தயாரித்து போட்டி போட்டு ஆட்டையப் போடுவதைத் தடுக்கக் கொண்டு வரப்பட்டதுதான, இந்த ஆதார். அதன் எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றால் அடித்தட்டு மக்களுக்குத்தான் பாதிப்பு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன