மகா புஷ்கர விழா பக்தர்களை குறிவைத்து காலாவதி குளிர்பானம் விற்பனை

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கர விழாவுக்கு வரும் பக்தர்களைக் குறிவைத்து காலாவதியான குளிர்பானம் விற்றுத் தீர்க்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னை கேகே நகரைச் சேர்ந்த தம்பதி, மகாபுஷ்கர விழாவில் பங்கேற்று, புனித நீராடிய பின், அருகிலுள்ள கடையில் ஃபேன்டா குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். அதன் சுவை மாற்றத்தை உணர்ந்து உற்பத்தி தேதியை பரிசோதித்தபோது, குளிர்பானம் காலாவதியாகி 16 மாதங்கள் ஆனதை அறிந்து அதிர்ந்தனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறையில் புகாரளிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!