மகனுக்கு ஆதரவாக வரிந்துக் கட்டும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை விசாரிப்பதை விட்டு தம்மிடம் விசாரணை நடத்துமாறு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அரசுமீதும் சிபிஐ மீதும் டிவிட்டர் பதிவுகளில் கடும் கண்டனத்தை வெளியிட்ட சிதம்பரம், கார்த்தியை சிபிஐ குறிவைப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார். சிபிஐ சம்மன் அனுப்பி கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ஏர்செல்-மேக்ஸிஸ் தொடர்பான அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை அளித்த தம்மிடம் விசாரணை நடத்துமாறு அவர் சிபிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *