Advertisement

போதை மருந்து பெண் சிறைவைப்பு..! புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்..!

இலங்கை பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் நடிகை புவனேஸ்வரி சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாய்ஸ், குண்டக்க மண்டக்க உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் நடிகை புவனேஸ்வரி..! திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளம் பெண் ஒருவரை போதை மருந்து கொடுத்து வீட்டில் சிறைவத்திருப்பதாகவும்,
23 வயதுள்ள அழகு கலை நிபுணரான அந்த இலங்கை பெண்ணை, நடிகை புவனேஸ்வரி தவறான வழியில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்துவதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. புவனேஸ்வரியின் பிடியில் உள்ள தனது மகளை மீட்டு தரும் படி திருச்சியில் வசித்துவரும் அந்த பெண்ணின் தந்தை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் எந்தவிதமான வடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை புவனேஸ்வரியிடம் இருந்து தனது மகளை மீட்டுத்தரகோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவுபடி நடிகை புவனேஸ்வரி ஆஜரானார். உடன் அவரது வளர்ப்புமகன் மிதுன் சீனிவாசனும், அந்த 23 வயது இளம் பெண்ணும் வந்திருந்தனர். நீதிபதியிடம் நடந்தது என்ன வென்று புவனேஸ்வரி விளக்கம் அளித்தார்.

திருச்சியை சேர்ந்த அந்த பெண், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி அழகு கலை நிபுணராக வேலைபார்த்த போது புவனேஸ்வரிக்கு மேக்கப் பயிற்சி அளிக்க வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவரது வளர்ப்பு மகன் மிதுன் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருச்சி சென்ற பின்னர் இருவரும் முகநூல் மூலம் காதல் வளர்த்துள்ளனர். காதல் விவகாரம் தெரிந்து அவர்களது வீட்டில் அந்த பெண்ணை கடுமையாக துன்புறுத்தியதால் அந்த பெண் புவனேஸ்வரி வீட்டிற்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது புவனேஸ்வரி ஐதராபாத்தில் படபிடிப்பில் இருந்ததால் வளர்ப்பு மகன் மிதுனும் அந்த பெண்ணும் வட பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை விளக்கமாக எடுத்து கூறிய புவனேஸ்வரி. அந்த பெண்ணை தான் அடைத்து வைக்கவில்லை என்றும் காதலை சேர்த்து வைத்ததால் தன் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

அந்த பெண்ணும் தான் சுயவிருப்பத்தின் பேரிலேயே புவனேஸ்வரியின் வீட்டில் தங்கி இருப்பதாக தெரிவித்ததால் அவரது தந்தையிடம் இருந்த இலங்கை பாஸ்போர்ட் அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலில் நடந்த திருமணத்தை பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, திருமண பதிவு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், வழக்கை நவம்பர் 21 ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டார்

பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய நடிகை புவனேஸ்வரி, அந்த பெண்ணின் சுயவிருப்பத்தின் காரணமாகவே அவர் தனது வீட்டில் இருப்பதாகவும் புவனேஸ்வரி என்றவுடன் இந்த விவகாரம் பெரிதாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதன் பின்னனியில் உள்ள நபர்கள் குறித்து கருத்துகூற விரும்பவில்லை என்ற புவனேஸ்வரி, வழக்கு முடிவுக்கு வரும் போது பல உண்மைகளை தெரிவிப்பதாக கூறிச்சென்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன