பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு

பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக சரிந்தது. எனவே, பொருளாதார மந்த நிலையை சமாளிக்கும் வகையில், நிதிசார் ஊக்கமளிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் ((Bibek Debroy)) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதை சமாளிக்கும் வகையில் 10 முன்னுரிமை துறைகளை பொருளாதார ஆலோசனைக்குழு அடையாளம் கண்டுள்ளது. அமைச்சரகங்கள், மாநிலங்கள், தனியார்துறையினருடன் ஆலோசனை நடத்தி, பொருளாதார ஆலோசனைக்குழு இவற்றின்மீது அறிக்கை தயாரித்து 6 மாதங்களில் வழங்க உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன